மே 15-க்குப் பின்னரே ரயில், விமானப் போக்குவரத்து தொடங்கும்!

 

மே 15-க்குப் பின்னரே ரயில், விமானப் போக்குவரத்து தொடங்கும்!

ஊரடங்கு நிறைவடைந்தாலும் மே 15-ந் தேதிக்குப் பின்னரே நாட்டில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு நிறைவடைந்தாலும் மே 15-ந் தேதிக்குப் பின்னரே நாட்டில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை முதல் லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த தளர்வுகள் குறித்து தமிழக அரசின் வல்லுநர் குழு பரிசீலித்து வருகிறது. இக்குழுவின் அறிக்கை நாளைதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னரே தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

flight

இந்நிலையில் இந்தியாவில் ரயில், விமானப் போக்குவரத்தை மே 15-ந் தேதிக்கு பின்னரே மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களில் அவதிப்படும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பாகவும் மே 3-ந் தேதிக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

முன்னதாக ஏர் இந்தியா நிறுவனமானது மே 4-ந் தேதி உள்நாட்டு விமான சேவைகளை இயக்குவதாலும் ஜூன் 1-ந் தேதி சர்வதேச விமான சேவைகளை தொடங்குவதாலும் முன்பதிவு தொடங்கப்படுவதாக அறிவித்திருந்தது. ஆனால் மத்திய அரசின் முடிவுகளுக்குப் பின்னரே முன்பதிவுகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார்.