மே.12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும்! நாளை முதல் முன்பதிவு- ரயில்வே

மே.12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும்! நாளை முதல் முன்பதிவு- ரயில்வே

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மே. 4 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக நாட்டின் பல பகுதிகளில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கிவருகிறது

ரயில்

இந்நிலையில் மே.12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. முதற்கட்டமாக டெல்லியிலிருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்களை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மாலை 4 மணி முதல் தொடங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்கள் டெல்லியில் இருந்து திப்ருகார், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை மத்திய, அகமதாபாத் மற்றும் ஜம்மு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களாக இயக்கப்படும்.