மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு.. முக்கிய விவரங்கள் இதோ !

 

மே மாதம் 3 ஆம் தேதி நீட் தேர்வு.. முக்கிய விவரங்கள் இதோ !

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு நடக்கவிருக்கும் நீட் தேர்வு குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. 

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அடுத்த கல்வியாண்டு நடக்கவிருக்கும் நீட் தேர்வு குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. 

ttn

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அதாவது, நாளை நீட் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசம் நள்ளிரவு 11:50 மணியோடு முடிகிறது என்றும் இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களின் கட்டணத்தை ஜனவரி 1 ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் ஏற்கனவே, விண்ணப்பித்த விண்ணப்பங்களில் ஏதேனும் பிழை இருந்தால் அதனைச் சரி செய்து கொள்ள அவகாசம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ttn

அதனைத் தொடர்ந்து, அடுத்த கல்வியாண்டிற்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடக்கவுள்ளது என்றும் அதன் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க இந்த முறை மதிப்பெண் சான்றிதழ், கட்டைவிரல் ரேகை உள்ளிட்டவற்றைப் பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் வழக்கமாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே பதிவேற்றப்படும் தகவல் கையேடுகள் இந்த முறை 9 மொழிகளில் பதிவேற்றம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், AIIMS, JIPMER உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்வதற்குத் தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நீட் தேர்வு மூலமாகவே அந்த கல்லூரிகளில் சேர்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.