மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள்: டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்!

 

மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள்:  டோக்கன் வழங்கும் தேதி மாற்றம்!

சென்னையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நேற்று 27 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாவால் இதுவரை 1683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நேற்று 27 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. 

tt

இதனிடையே மே மாதத்திற்கான விலையில்லா  ரேஷன் பொருட்களை வாங்க ஏதுவாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த டோக்கன்களில் பொருட்கள் வழங்கும் நாள், மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி பொதுமக்கள் சென்று பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

tt

இந்நிலையில் தற்போது அந்த தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது மே  4 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் மே மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 2 மற்றும் 5 ஆம் தேதிகளில் வீட்டிற்கே வந்து அதற்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

tt

விலையில்லா ரேஷன் பொருட்களில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்றும் இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து  சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக வாங்கி செல்லலாம் என்றும் கூறியுள்ளது.