மே தினம்: பறிபோகும் பாட்டாளி வர்க்க உரிமை?!..

 

மே தினம்: பறிபோகும் பாட்டாளி வர்க்க உரிமை?!..

சரி வேலையில்லா பட்டதாரிகளுக்கு நல்லதுதானே செய்கிறார்கள். இதிலென்ன பிரச்சனை என்கிறீர்களா?..அதில் தான் சூட்சமம் உள்ளது… அதை அடுத்தடுத்து பார்ப்போம்.

பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட அனைத்து உரிமைகளும் அரசு எனும் முதலாளித்துவ அமைப்பின் தலைமையோடும் துணையோடும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து உரிமைகள் பிடுங்கப்பட்டு மீண்டும் 180 வருட காலத்திற்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இன்றைய நாளில் கொண்டாங்களை பேசிக்கொண்டிருக்கும் தேவையைவிட இப்போது கண்முன் நடக்கும் அநியாயங்களை பேசுவதே அத்தியாவசிய தேவை.

NEEM எனும் அராஜகம்.
NEEM என்றால் என்ன? 
அது என்ன அராஜகம் செய்தது?

NEEM- National Employability Enhancement Scheme

dcxzv

மத்திய அரசும் All India Council for Technical Education (​AICTE) யும் இணைந்து கொண்டு வந்த திட்டம் இது.

இதன் நோக்கம் என்ன? இந்தியாவில் உள்ள இளம் பட்டதாரிகளை skilled labour ஆக மாற்றுவதும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்டுவதும் தான்.
இதுதான் அவர்கள் சொல்லும் நோக்கம்.

இன்னும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம். இந்த NEEM ஒரு அப்ரெண்டிஷிப் ட்ரெய்னிங்கும் கிடையாது. ஒப்பந்த முறையும் கிடையாது என்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த இரண்டிலுமே NEEM ஐ பொருத்தி பார்க்கலாம். 
1. இதிலும் ஒப்பந்த முறையில் உள்ளது போலவே இதற்கென்று தனி நிறுவனங்கள் labour களை வைத்திருக்கும். Manpower தேவைப்படும் இடங்களுக்கு அந்த நிறுவனம் தன் வேலையாட்களை அனுப்பி வைக்கும். அதற்கேற்ப சம்பளம் முதலான இதர இத்யாதிகள் அந்த நிறுவனத்துக்கும் தொழிற்சாலைக்கும் இடையில் ஒப்பந்ததின் மூலம் உறுதி செய்யப்படும்.
அப்படியென்றால் ஒப்பந்த முறைக்கும் இந்த NEEM ற்கும் என்ன வித்தியாசம். ஒப்பந்த முறை அரசின் கணக்கில் வராது. அதாவது நாங்கள் இத்தனை லட்சம் வேலை வாய்ப்பை வழங்கி இருக்கிறோம் என்று வாய்ச்சவடால் விட முடியாது. படிப்பு , வயது முதலானவை அதிகமாக கருத்தில் கொள்ளப்படாது. 
நிரந்தர தொழிலாளர்களுக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு வேறுபாடு காண்பிக்கப்படும்.
ஆனால் NEEM முறையில் சேர்க்கப்படும் அனைத்து வேலைவாய்ப்பும் அரசின் கணக்கில் சேர்க்கப்படும். அது ஆளும் மத்திய அரசுக்கு ஒரு போனஸ் பாயிண்டாகவும் படித்த வேலையற்ற இளைஞர்களை மூளைச்சலவை செய்ய உதவும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறோம், தொழிலாளர்களுக்குள் பாகுபாடு காட்டப்படுவது இல்லை , போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

சரி வேலையில்லா பட்டதாரிகளுக்கு நல்லதுதானே செய்கிறார்கள். இதிலென்ன பிரச்சனை என்கிறீர்களா?..அதில் தான் சூட்சமம் உள்ளது… அதை அடுத்தடுத்து பார்ப்போம்.

hsf

*NEEM trainee க்கான தகுதியில் முக்கியமான தகுதி வயது வரம்பு 18 to 40 வரை . அதாவது உடலிலும் மனதிலும் பலம் இருக்கும் வரை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் செயல். யோசித்து பாருங்கள், 40 வயதில் உங்களை ஒரு நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி விட்டால் உங்களின் நிலை என்ன ஆகும்??
*அடுத்ததாக அவர்கள் கூறுவது போல் on the job training, skilled labour ஐ உருவாக்குகிறார்களா? 
நடைமுறையில் எனக்கு தெரிந்தவரை 2017 இல் இருந்தே NEEM trainees recruit செய்யப்படுறாங்க.. ஆனால் இவர்களை அதிகபட்சம் மூன்று வருடத்திற்கு மேல் இவர்களை வைத்திருப்பதற்கான சாத்தியம் சொற்பமாகவே இருக்கிறது.
சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளைகளையே இவர்கள் உருவாக்கி வேலை வாங்கி கொண்டிருக்கிறார்கள். அதனால் OJT, Skilled labour எல்லாம் பித்தலாட்டம் தான்.

வந்து கொண்டிருக்கும் அபாயங்கள்:

1.இனி எந்த ஒரு தொழிலாளியையும் பணி நிரந்தரம் செய்ய மாட்டார்கள்.
2.நிரந்தர தொழிலாள்ர்கள் அனைவரின் வயது வரம்பு முடியும் போது நிறுவனம் முழுவதும் ஒப்பந்த மற்றும் NEEM தொழிலாளர்களால் நிரப்பப்பட்டு இருக்கும்.
3.தொழிற்சங்கங்களை அழிக்கும் மறைமுக நடவடிக்கையே இந்த NEEM.
4. 25 கோடிக்கும் அதிகமாக turnover செய்யும் நிறுவனங்கள் 5000 NEEM தொழிலாளர்களை வைத்துக்கொள்ளலாம் என்பது criteria. நடைமுறையில் 25 கோடி என்பது 
என்பது என்ன அவ்வளவு அதிகமான தொகையா? இது அரசு கார்ப்பரேட்டுக்கு செய்யும் அடிவருடி வேலையே தவிர வேறொன்றும் இல்லை.
5. இதையெல்லாம் தான்டி இளைஞர்கள் மனதில் பதியவைக்கப்படும் நஞ்சு. நிரந்தரத் தொழிலாளர்களால் தான் தங்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனும் மாயையை உருவாக்குதல். இவை இரண்டையும் செய்வதன் மூலம் நிரந்தர தொழிலாளர், தொழிற்சங்கங்கள் மீது தற்காலிக , ஒப்பந்த மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒரு வெறுப்பை உண்டாக்குதல் .
இவையனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

சுருங்க சொன்னால் நிரந்தர தொழிலாளர்களே இல்லாத இந்தியாவை உருவாக்க அரசு எனும் அமைப்பு கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக முழுவீச்சில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இது ஒரு long term plan. இதன் தாக்கம் சிலருக்கு இப்போது புரியாமல் இருக்கலாம். ஆனால் இதன் மூலம் நம் அடுத்த தலைமுறை சந்திக்க போகும் இழப்பு நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு இருக்கும்.

பாஜகவோ காங்கிரசோ யார் வந்தாலும் இதனை தடுக்க மாட்டார்கள். தன் கண்ணை கையாலயே குத்திக்கொள்ள அவர்கள் என்ன நம்மைப்போல் முட்டாள்களா? நாம் தான் போராடவேண்டும். நமக்கான வலிக்கு நாம் தான் தட்டிக்கேட்க வேண்டும்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக.
இன்குலாப் ஜிந்தாபாத்.

எழுத்து: அருண் கோமதி (சமூகவலைதள பதிவர்)