மே தினம் : அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

 

மே தினம் : அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

ஒற்றுமையுடன்  தங்களது உரிமைகளை மீட்டெடுத்த தினமான  இன்று உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகள் மறுக்கப்பட்டு, அதிகமான பணிநேரத்துடன், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் கொத்தடிமைகளாக இருந்து வந்த  நிலையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் ஒற்றுமையுடன்  தங்களது உரிமைகளை மீட்டெடுத்த தினமான  இன்று உழைப்பாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

 உழைப்பை மூலதனமாக கொண்ட உழைக்கும் மக்களின் உன்னதத்தை உலகிற்கு பறைசாற்றும் தினமாகவும் மே தினம் விளங்குகிறது. இந்த நாளில்  கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர்கள் வரை அனைவருக்கும் பலரும் வாழ்த்து கூறி மகிழ்கின்றனர்.  அந்த வகையில்  அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மே தின வாழ்த்து கூறி வருகின்றனர். 

tt

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ““உழைப்பே உயர்வு தரும், ஒளிமயமான வாழ்வுக்கு வழிவகுக்கும்” என்ற நம்பிக்கையோடு, தங்களின் கடினமான உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும் எனது அன்புக்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

rr

திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஒரு புறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய – மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர்களின் பக்கம் தி.மு.கழகம் எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும்! தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இணைந்து போராடும்! தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது #MayDay2020 வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார். 

இதுதவிர  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ஜனதா தலைவர் எல்.முருகன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்ஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட  பல தலைவர்கள்  வாழ்த்து கூறியுள்ளனர்.