மே தினமும் அஜித்தும் – அஜித் பற்றி சட்டக் கல்லூரி மாணவி

 

மே தினமும் அஜித்தும் – அஜித் பற்றி சட்டக் கல்லூரி மாணவி

கூலி வேலை செய்யுறவர்ல இருந்து கோட்ஸ் சூட் போட்டு உட்காந்து இருக்கவர் வர அவரை பின்பற்றுர எல்லாரும் சொல்லுற விஷயம் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் சார்

“உழைப்பாளர் தினத்தை விட்டுட்டு ஏன் டா இந்த மனுஷனை கொண்டாடிட்டு இருக்கீங்க ? நீ உழைச்சா தான் உன் குடும்பத்துக்கு சோறு” இந்த டயலாக் எல்லா மே தினத்துலயும் கண்ணுல படுற ஒன்னு. ஆனா பாருங்க உங்கள போல தான் அந்த மனுஷனும் “நீ உன் குடும்பத்தை பாரு..படி வேலைக்கு போ உன் திறமைய எதுல காட்டணுமோ அதுல காட்டு இங்க நான் நடிக்க தான் வந்துருக்கேன் அது என் பொழப்பு உனக்குன்னு ஒரு பொழப்பு இருக்கும் அதை முடிச்சிட்டு நேரம் இருந்தா என் படம் பாரு..

அஜித்

உழைப்பு மட்டும் தான் உன்ன உயர்த்தும்”னு சொல்லி இருக்கார். இதுக்கு சாட்சி எல்லாம் பெருசா நான் கொடுக்க தேவை இல்ல..எல்லா அறிக்கையிலையும் அவர் பக்கம் இருந்து வர விஷயம் “என் ரசிகர்கள் ஆரோக்கியமாகவும் நல்ல குடிமகனாகவும் எல்லா கடமைகளை செஞ்சிட்டு தன் குடும்பத்தை பார்க்கணும் வழி மாறி போக கூடாது”.இதை நீங்க எப்படி வேணா பார்க்கலாம் ஆனா இதை விட ஒரு தலைவன் தன் பின்னாடி நிக்கிற கூட்டத்துக்கு என்ன நல்லதா சொல்லிற முடியும்?..

அஜித்

கூலி வேலை செய்யுறவர்ல இருந்து கோட்ஸ் சூட் போட்டு உட்காந்து இருக்கவர் வர அவரை பின்பற்றுர எல்லாரும் சொல்லுற விஷயம் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் சார்…

நீங்க குடும்பத்தை பாருங்க திருந்துங்க so and so னு சொல்லுற அளவுக்கு எல்லாம் இங்க யாரும் இல்ல…recent ஆர்டிக்கல் ஒன்னு படிச்சி இருப்பிங்க BA ஹிஸ்டரி முடிச்சிட்டு கவர்ன்மெண்ட் வேலை பார்த்துட்டு இருந்த கண் தெரியாத நடு வயதை தாண்டுன ஒருவர் தன் குறையை காரணம் காட்டி வேலை தொலைச்சி நடு ரோட்ல நிக்குறப்ப கூட “நான் தல ரசிகன் சார் கண்ணு தெரிலனு கை நீட்டி பிச்சை எடுக்குறத விட பர்பி வித்து உழைச்சி பொழச்சிக்குவேன் சார்”னு தன் தன்மானத்தை இறக்கி வெய்க்காம தல நிமிர்ந்து அந்த பதில் சொல்வார்..இங்க அந்த கூட்டத்துக்கு உழைக்கனும்னு உரைக்கிற மாதிரி ஒருத்தன் பதிய வெச்சிருக்கான்ல அவனை கொண்டாடலாம் கொண்டாடுறோம்.

 

எழுத்து: கமலி லக்‌ஷனா (சட்டக் கல்லூரி மாணவி)