மேல் முறையீடு செய்வதா? தேர்தலை சந்திப்பதா? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

 

மேல் முறையீடு செய்வதா? தேர்தலை சந்திப்பதா? தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்வதா? இல்லை தேர்தலை சந்திப்பதா? என ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

சிவகங்கை: தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்வதா? இல்லை தேர்தலை சந்திப்பதா? என ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் அதிரடி தீர்ப்பளித்தார். இதனால் டிடிவி தரப்பினர் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில், தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவுமான தங்க தமிழ்ச்செல்வன் சிவகங்கையில் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்வதா? தேர்தலை சந்திப்பதா? என்பதை ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்வோம்.நீதிமன்றம் தீர்ப்பு அளித்தாலும் மக்கள் மன்றத்தில் எங்களுக்கு ஆதரவு உள்ளது. மூன்றாவது நீதிபதி நல்ல தீர்ப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையில்தான் மேல் முறையீடு செய்ய மாட்டேன் என கூறினேன் என்றார்.