மேல்முறையீடு செய்யப்போவதில்லை: டிடிவி தினகரன் திட்டவட்டம்

 

மேல்முறையீடு செய்யப்போவதில்லை: டிடிவி தினகரன் திட்டவட்டம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மதுரை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் சமீபத்தில் தீர்ப்பளித்தார். இதனையடுத்து தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வேண்டாம் என்பதால் தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளோம். மக்களின் கருத்துக்ளை கேட்ட பின்னர் பெரும்பாலான தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதர தகுதி நீக்க எம்எல்ஏ-க்களுடன் ஆலோசித்த பிறகு வருகிற 31-ம் தேதி மதுரையில் அதிகாரப்பூர்வமாக இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

அதன்படி, தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 20 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். 20 தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக டெபாசிட் பெறவே போராடும் என்றார்.