மேலும் 2 டாக்டருக்கு கொரோனா ! மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் விடுதிக்கு சீல் !!

 

மேலும் 2 டாக்டருக்கு கொரோனா ! மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் விடுதிக்கு சீல் !!

மேலும் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.
இதற்குக் காரணம் விடுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளருக்கு கொரோனா தொற்று இருந்ததால் மருத்துவர்களுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. ஏற்கனேவ மருத்துவமனை ஊழியர்கள், தொழிலாளர்கள் என 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் பெரும்பாலானார்வர்கள் இதயத்துறையில் பணிபுரிபவர்கள். இதில் 6 முதுகலை மாணவர்கள் மற்றும் ஒரு செவிலியர் கடந்த வாரம் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 
இந்நிலையில் எம்.எம்.சி.யின் ஒரு விடுதி முழுமையாக  கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது 102 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 100 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. மேலும் பயிற்சிக்காக வந்தவர்களும் பரிசோதிக்கப்பட்டனர்.

madras-medical-college-01

471 மருத்துவர்கள், 363 செவிலியர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்குள்ளவர்கள் தெரிவிக்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மேலும் வசதிகள் செய்து தரவேண்டும் என்றும் அதற்கான ஆடைகளும் அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஆனால் இது குறித்து மருத்துவமனை டீன் மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டு மாணவர்களும் கொரோனா வார்டில் பணிபுரியவில்லை என்றும், விடுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு தொற்று இருந்ததால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.