மேலாடையின்றி ஹீரோவை கட்டியணைத்தபடி நிற்கும் நடிகை ராய் லட்சுமி …வெப் சீரிஸின் ஃபஸ்ட் லுக்!

 

மேலாடையின்றி  ஹீரோவை கட்டியணைத்தபடி நிற்கும் நடிகை ராய் லட்சுமி …வெப் சீரிஸின் ஃபஸ்ட் லுக்!

 தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. இவர் தற்போது  சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்

நடிகை ராய் லட்சுமி தமிழ் திரையுலகில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார்.

ttn

அதையடுத்து  தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. இவர் தற்போது  சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராய் லட்சுமி பேயாக நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகிவரும்  படத்தின் டீசர் சமீபத்தில் மிரட்டலாக வெளியானது. இதை தவிர்த்து வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். 

 

இந்நிலையில்  நடிகை  ராய் லட்சுமி  நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற  ’பாய்சன்’  தொடரின் இரண்டாம் பாகமாகும். இது ஜீ ஆப்பில் வெளியாகியுள்ளது.  இதில் ராய் லட்சுமி  டாப்லெஸ் உடையுடன் ஹீரோ  அப்தாப் சிவதசனியுடன்  கட்டியணைத்தபடி நிற்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. 

ttn

விஷால் பாண்டியா இயக்கவுள்ள இந்த வெப்சீரீஸில் பூஜா சோப்ரா, கௌதம் குலாட்டி, தாஹீர் சபீர் உள்பட பலர் நடித்துள்ளனர். இது  வரும் 30ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.