மேற்கு வங்கத்தில் பச்சை மண்டல மாவட்டங்களில் பொது போக்குவரத்து அனுமதி…. காவல்துறை தகவல்..

 

மேற்கு வங்கத்தில் பச்சை மண்டல மாவட்டங்களில் பொது போக்குவரத்து அனுமதி…. காவல்துறை தகவல்..

மேற்கு வங்கத்தில் பச்சை மண்டல மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான திறன் கொண்ட பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அம்மாநில காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொற்று நோயான கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. நேற்று மாலை நிலவரப்படி,  அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,259ஆக உள்ளது. மேலும் கொரோனா வைரசுக்கு 133 பேர் உயிர் இழந்துள்ளனர்.

முதல்வர் மம்தா பானர்ஜி

இந்த சூழ்நிலையில், மேற்கு வங்கத்தின் பச்சை மண்டல மாவட்டங்களில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அம்மாநில காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க காவல்துறை டிவிட்டரில், மாநிலத்தில் பச்சை மண்டல மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான திறன் கொண்ட பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து வேலை பார்க்க முயற்சி செய்யுங்க.

கார்

வெளியே போக வேண்டும் என்ற அவசியம் இருந்தால் மாஸ்க் அணிய மறக்காதீர்கள் மற்றும் உடல் சார்ந்த இடைவெளியை பாராமரியுங்கள். மேற்கு வங்க போலீஸ் தொடர்ந்து லாக்டவுனை கடுமையாக அமல்படுத்தும். கட்டுப்படுத்துதல் மண்டலங்களை தவிர மற்ற பகுதிகளில் சின்ன வாகனங்களில் 3 பேர் செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த மார்ச் 25 முதல் இதுவரை லாக்டவுன் விதிமுறைகளை மீறிய 40,723 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,614 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.