மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; மாணவர் பலி

 

மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; மாணவர் பலி

பெங்காலி மொழியில் பாடம் நடத்தாத ஆசிரியர்களை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 19 வயது மாணவர் பலியாகியுள்ள சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்கத்தா: பெங்காலி மொழியில் பாடம் நடத்தாத ஆசிரியர்களை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 19 வயது மாணவர் பலியாகியுள்ள சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் இஸ்லாம்பூரில் செயல்பட்டு வருகிறது தரிபித் உயர் நிலைப்பள்ளி. அங்கு அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கு பெங்காலி மொழியில் பாடம் நடத்த ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் பெங்காலி மொழியில் பாடம் நடத்தாமல்  உருது மற்றும் சமஸ்கிருதத்தில் பாடம் நடத்தியதால் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆசிரியர்களுக்கு எதிராக தர்ஹிம்பித் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது 19 வயது மாணவர் குண்டடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த மாணவர் பெயர் ராஜேஷ் சர்கார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால், இதுகுறித்து டிஐஜி ஜெயந்த் பால் கூறுகையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் இறக்கவில்லை. மாணவர் இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். மேலும், தெற்கு தீனஜ்பூர் எஸ்.பி சுமித்குமார் இதுகுறித்து கூறுகையில், நாங்கள் ரப்பர் குண்டுகளை மட்டுமே உபயோகப்படுத்தினோம், துப்பாக்கி தோட்டாக்களை உபயோகப்படுத்தவில்லை எனவும் கூறியிருக்கிறார்.