மேற்கு தொடர்ச்சி மலையில கை வைக்கிற வேலையெல்லாம் வேணாம்! எச்சரித்த சமுத்திரக்கனி!?

 

மேற்கு தொடர்ச்சி மலையில கை வைக்கிற வேலையெல்லாம் வேணாம்! எச்சரித்த சமுத்திரக்கனி!?

தமிழ் திரைப்பட ஃபைட்டர்ஸ் யூனியன் தொடங்கி இன்றோடு  52 ஆண்டுகள் ஆகின்றன.சீனியர் ஃபைட் மாஸ்டர்களை வரவழைத்து இன்று சிறப்பாக விழா கொண்டாடப்பட்டது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு,சமுத்திரகனி, ஜாக்குவார் தங்கம், தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் சிறப்பு  அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சுற்றியுள்ள இடங்களில் மரக் கன்றுகளை  நட்டு வைத்தார்கள்.

fffs

விழாவில் கலந்துகொண்ட சமுத்திரகனி பேசும் போது “இப்போ இங்கே நுழையும் போதே காசு கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலைக்  கொடுத்தார்கள்,காசு கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய நிலைக்கு இந்த தலை முறையினரே தள்ள பட்டு விட்டோம்.அடுத்த தலை முறையினரின் கதி என்னவாகும் என்று யோசித்து பார்க்க வேண்டும்.ஒவ்வொருத்தரும் மரம் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

sddsv

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மரங்களை வெட்டாதீர்கள்,அந்த மரங்கள் தான் எங்கள் நாட்டை பாதுகாக்கும் அரண் போல இருக்கு.எங்கள் நாடு இயற்கையிலிருந்து பாதுகாக்கப் படுவதே அந்த மரங்கள்தான்.அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் என்று ஜப்பான் அரசாங்கம் நமக்கு உதவி செய்கிறது! 

bcxbcbc

நம்ம நாட்டு மரங்கள் இன்னொரு நாட்டுக்கும் உதவியா இருக்குன்னு அவங்களே சொல்லும் போது நாம எப்படி பாதுகாக்கணும்? நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும்”என்று சொன்னார். 

மரங்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கப்போகிறது என்பதை இந்த சம்மர் வெயிலே பலருக்கு உணர்த்தியிருக்கும்.இனிமேலாவது மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்துங்கள்.

இதையும் படிங்க: நோட்டாவுக்கு ஒட்டு போடாதீங்க…வெங்கட் பிரபு வேண்டுகோள்…