மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

 

மேற்குவங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்

மேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

மேற்குவங்கத்தில் நடைபெற்றுவந்த மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவமனையில் ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவரை தாக்கினர்.

இதை கண்டித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக் இந்தியா முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர சேவை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி தமிழகத்திலும் இந்த போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. அதன்படி சேவையை புறக்கணிக்காமல் ஹெல்மெட் அணிந்தும் கருப்பு பேட்ஜ் அணிந்தும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு அம்மாநில மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது