மேரேஜ் வெப்சைட்டில் மெகா மோசடி -விதவைகளை குறிவைக்கும் வில்லன்கள் -ஊடக தகவலில் உஷார்.. 

 

மேரேஜ் வெப்சைட்டில் மெகா மோசடி -விதவைகளை குறிவைக்கும் வில்லன்கள் -ஊடக தகவலில் உஷார்.. 

அப்போது அவர் தன்னுடைய பெயர் ராகுல் என்றும் தான் ஒரு வங்கியில் மானேஜராக பணிபுரிவதாகவும், உங்களைப் போல நானும் விவகாரத்து ஆனவர்தான் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அதை நம்பிய அவர் அடிக்கடி அவரோடு தொடர்பிலிருந்தார்.

பெங்களூருவில் மஞ்சுநாத் என்ற 28 வயது வாலிபர் ஜனவரி மாதம் ஒரு திருமண வெப்சைட்டில் சுரக்சா என்ற 36 வயது விதவை பெண்னோடு தொடர்பு கொண்டார். அப்போது அவர் தன்னுடைய பெயர் ராகுல் என்றும் தான் ஒரு வங்கியில் மானேஜராக பணிபுரிவதாகவும், உங்களைப் போல நானும் விவகாரத்து ஆனவர்தான் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அதை நம்பிய அவர் அடிக்கடி அவரோடு தொடர்பிலிருந்தார்.

arrest

பிறகு மஞ்சுநாத் அந்த பெண்ணிடம் தங்களின் பிஸினஸுக்கு 70 லட்சம் ரூபாய் தான் தனது வங்கியிலிருந்து தங்களுக்கு கடன் வாங்கி தருவதாக கூறினார், மேலும் அதற்கு ப்ரோசஸிங் தொகையாக ரூபாய் 6 லட்சம் வேண்டுமென்றார். அதை நம்பி அந்த பெண்ணும் 6 லட்ச ரூபாயை படிப்படியாக கொடுத்தார்.
6 லட்சம் வாங்கியபிறகு மஞ்சுநாத் அந்த பெண்ணிடம் தன் தொடர்பை கைவிட்டார். அதற்கு பிறகு சுரக்ஸ்சா பலமுறை அவரை தொடர்பு கொண்டும் அவரோடு பேச முடியாததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் அவர் மீது புகாரளித்தார். போலீஸ் விசாரணையில் மஞ்சுநாத் இப்படி பல விதவை பெண்களை கல்யாண வெப்சைட் மூலம் ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.