மேயர் வீட்டில் பணிபுரிந்தது ஒரு குற்றமா?  நிர்கதியான மாரியம்மாளின் குடும்பம்!!

 

மேயர் வீட்டில் பணிபுரிந்தது ஒரு குற்றமா?  நிர்கதியான மாரியம்மாளின் குடும்பம்!!

நெல்லை திமுக முன்னாள் மேயர் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்கதியாய் நிற்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை திமுக முன்னாள் மேயர் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் குடும்பம் தற்போது நிர்கதியாய் நிற்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலையின் போது உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாள் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலைக்கான காரணம், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

இந்நிலையில் உமா மகேஸ்வரியின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவர் மாரியம்மாள். வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூவரும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த பத்து வருடங்களுக்கு முன் கணவனை இழந்த மாரியம்மாள், மேயரின் வீட்டில் பணிபுரிந்து குழந்தைகளை படிக்கவைத்து வந்தார். தற்போது தாயும் இறந்துவிட்ட சூழ்நிலையில், 3 பெண் குழந்தைகளின் கல்வியும், எதிர்காலமும் கேள்விகுறியாகியுள்ளது. தாய், தந்தையை இழந்ததால் வயதான மாரியம்மாளின் தாயும், மூன்று குழந்தைகளும் நிற்கதியாய் நிற்கின்ற்னர்.  தவித்து நிற்கும் அந்த மூன்று குழந்தைகளுக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்களும் மாரியம்மாளின் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.