மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: நீர் மட்டம் உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: நீர் மட்டம் உயர்வு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால்  மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால்  மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆணையில் பெய்து வரும் கண மழையால் நீர் வரப்பு அதிகரித்துள்ளது. 124.80 அடி அளவுக்கு நீரை தேக்கும் உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணை முழுமையாக நிரம்பியுள்ள நிலையில் வினாடிக்கு 24 ஆயிரத்து 511 கனஅடி  நீர் வெளியேற்ற படுகிறது.84 அடி நீரை தேக்கும் உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 83.23 அடியாக உள்ள நிலையில்  அணையில் இருந்து  வினாடிக்கு 30 கனஅடி நீர்  காவிரியில் வெளியேற்ற படுகிறது.

இந்த இரு அணைகளிலும் இருந்து மொத்தமாக 54,711 கன அடி நீர் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படுகிறது.இதனால் இன்று காலை 8 மணியளவில் 115.85 ஆக இருந்த அணையின் நீர்மட்டம் மாலை 4 மணிக்கு 116.02 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகவும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காகவும் நீர் திறந்து விடப்படுகிறது.