மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழப்பு : வீட்டு உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் !

 

மேட்டுப்பாளையம் 17 பேர் உயிரிழப்பு : வீட்டு உரிமையாளருக்கு நிபந்தனை ஜாமீன் !

நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகக் கடந்த 3 ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகக் கடந்த 3 ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வரிசையாக நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகியது. இதில், வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ttn

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தாழ்த்தப்பட்ட மக்களை அப்பகுதியில் இருந்து விலக்க வேண்டும் என்ற நோக்கோடு அந்த சுவரை எழுப்பிய வீட்டு உரிமையாளர் சிவ சுப்ரமணியன், அப்பகுதி மக்களின் போராட்டத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டார். 

TTN

இது தொடர்பான வழக்கு சென்னைஉயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வீடு உரிமையாளர் சிவ சுப்பிரமணியன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும்,நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரையில் தங்கி மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.