மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மெழுகு சிலை!

 

மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மெழுகு சிலை!

சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது.

உலகில் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியம் அமெரிக்காவின் நியூயார்க் நகரம், லண்டன், சிங்கப்பூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இந்த மியூசியத்தில் உலகப்புகழ் பெற்ற ஏ-லிஸ்ட் நடிகர்களின் மெழுகு சிலைகள் நிறுவப்படும். மியூசியத்திற்கு வரும் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நட்சத்திரங்களின் மெழுகு சிலை அருகே புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் கிரிக்கெட் கேப்டனின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கு மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையை நடிகை அனுஷ்கா ஷர்மாவே திறந்து வைத்துள்ளார்.

இந்த மெழுகு சிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா, கையில் விலையுயர்ந்த செல்போனில் செல்ஃபி எடுப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவின் மெழுகு சிலை கையில் உள்ள செல்போன் மூலமாகவேசெல்ஃபிஎடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் புதிய வசதியுடன் இந்த சிலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

anushka

ஏற்கனவே சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோரின் மெழுகு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.