‘மேக் அப்’ ரூமை ‘பெட் ரூம் ‘மாக மாற்றிய  டைரக்டர் -எண்பது நடிகைகள்  நாசம்  -‘Me too ‘ – வில் மாட்டினார்…..

 

‘மேக் அப்’ ரூமை ‘பெட் ரூம் ‘மாக மாற்றிய  டைரக்டர் -எண்பது நடிகைகள்  நாசம்  -‘Me too ‘ – வில் மாட்டினார்…..

டிகை அன்னபெல்லா சியோரா அவர் மீது,  மேக் அப் ரூமில் தனது தலைக்கு பின்னால் கைகளை கட்டிவிட்டு , 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக  வியாழக்கிழமை நீதிபதிகள் முன்பு  சாட்சியம் அளித்தார், முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான வெய்ன்ஸ்டின் மீது  நடந்த  பாலியல் குற்றச்சாட்டு விசாரணையில் அவர் இதை தெரிவித்தார்  .

நியூயார்க் (ராய்ட்டர்ஸ்) – ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்ற ஹாலிவுட் இயக்குனர் மீது பிரபலமான நடிகைகள் உள்பட எண்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் ‘மீ டூ’ வில் பாலியல் புகார் கூறியுள்ளனர் .
நடிகை அன்னபெல்லா சியோரா அவர் மீது, மேக் அப் ரூமில் தனது தலைக்கு பின்னால் கைகளை கட்டிவிட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாழக்கிழமை நீதிபதிகள் முன்பு  சாட்சியம் அளித்தார், முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான வெய்ன்ஸ்டின் மீது  நடந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணையில் அவர் இதை தெரிவித்தார்  ..

annabella sciorra

“நான் போராட முயன்றபோது,என்னை மீறி அவர் என்னுடன் உடலுறவு கொண்டார், ஆனால்  என் கைகள் கட்டப்பட்டிருந்ததால் என்னால்  சண்டையிட முடியவில்லை,” என்று அவர் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களைக் கொண்ட நியூயார்க் நடுவர் மன்றத்திடம் கூறினார். கோர்ட் மேஜையில் உட்கார்ந்திருந்த வெய்ன்ஸ்டீன், விசாரணையின் போது குறிப்புகளை எடுத்தார்.

67 வயதான வெய்ன்ஸ்டீன், மிமி ஹேலி மற்றும் ஜெசிகா மான் ஆகிய இரு பெண்களை பலாத்காரம் செய்த  குற்றச்சாட்டில் தான் குற்றவாளி அல்ல என்றும், நடிகைகளுடனான தனது பாலியல் உறவுகள் அனைத்தும் அவர்கள் சம்மதத்துடன்தான் நடந்தது என்று அவர் கூறியுள்ளார்.