மேகேதாட்டுவில் கர்நாடகா அணை: உச்ச நீதிமன்றம் செல்ல தமிழக அரசு முடிவு

 

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை: உச்ச நீதிமன்றம் செல்ல தமிழக அரசு முடிவு

மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிதாக அணைகள் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக ரூ.5,929 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும். எனவே, கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனிடையே, மேகேதாட்டு அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயார் செய்த கர்நாடக அரசு, மத்திய சுற்று சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது.  இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அணை கட்டுவதற்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தின் அனுமதி கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியதையடுத்து, இறுதி அறிக்கைக்கு கர்நாடகா ஒப்புதல் பெறுவதை தடுக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.