மேகத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆய்வாளர்கள்! அப்ப இனி நோ பவர்கட்…

 

மேகத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆய்வாளர்கள்! அப்ப இனி நோ பவர்கட்…

வரலாற்றிலேயே முதன்முறையாக மேகமூட்டத்தை பயன்படுத்தி மின்சாரத்தை தயாரித்து அமெரிக்க ஆய்வாளர்கள் வியக்கவைத்துள்ளனர். 

வரலாற்றிலேயே முதன்முறையாக மேகமூட்டத்தை பயன்படுத்தி மின்சாரத்தை தயாரித்து அமெரிக்க ஆய்வாளர்கள்  வியக்கவைத்துள்ளனர். 

சூரியன் இல்லையென்றால் எப்படி வெளிச்சம் இருக்காதோ அதே போன்று மேகக்கூட்டங்கள் இல்லையென்றால் பூமியில் குளிர்ச்சி இருக்காது.  சூரியனிடமிருந்துவரும் ஒளிக்கற்றை எவ்வாறு மின்சக்தியாக மாற்றுப்படுகிறதோ அதேபோன்று மேகங்கள் குளிர்ச்சியடைவதை அடிப்படையாக கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளனர். இதுதொடர்பான ஆய்வுக்கட்டுறையானது  ‘அப்ளைடு பிசிக்ஸ் லெட்டெர்ஸ்’ என பத்திரிகையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேகக்கூட்டத்திலிருந்து வெளியேறும் அகச்சிவப்பு ஒளி குறைக்கடத்தி மின்சாரத்தை உருவாக்குகிறது. இதன்மூலம் ஒரு சதுர மீட்டர் இடைவெளியில் உள்ள மேக கூட்டத்திலிருந்து 46 நானோவாட்  மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சூரியன் மட்டுமல்ல மேகங்களும், அண்டவெளியில் உள்ள மேலும் சில பொருட்களும் இதுபோன்ற அதிசய திறன்களை பெற்றிருக்கும் என அமெரிக்காவில் உள்ள ‘ஸ்டண்ட்போர்ட்’ பல்கலைக்கழக பேராசிரியரான ஷன்ஹுயி பேன் தெரிவிக்கிறார். இந்த முறை விரைவில் சோதனை செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் என்றும், இயற்கை வளங்களிலிருந்தே மின்சாரத்தை எளிதாக பெறமுடியும் என்றும்  ஷன்ஹூயி கூறுகிறார்.