மேகதாது அணை விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

 

மேகதாது அணை விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும் என்பதால் கர்நாடக அரசின் அணை கட்டும் முடிவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீரென ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க திமுக தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில்  மதிமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த கூட்டத்தில் மேகதாது அணை, ஸ்டெர்லைட் விவகாரம், கஜா புயலில் தமிழக அரசின் செயல்பாடு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.