மேகதாது அணை குறித்து சோனியாவிடம் பேசுவேன்: மு.க.ஸ்டாலின் உறுதி!

 

மேகதாது அணை குறித்து சோனியாவிடம் பேசுவேன்: மு.க.ஸ்டாலின் உறுதி!

எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சென்னை: எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ளார்.
இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அப்போது  சென்னை விமான சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த  மு.க.ஸ்டாலின், ‘நாளை பாஜகவுக்கு எதிராக நடைபெறும்  எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறேன் . அது தவிர்த்து காவிரி மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன்’ என்று கூறினார். 

டெல்லி செல்லும் ஸ்டாலின் இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார். மேலும், அவரிடம் 16-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழையும் வழங்குகிறார். இதேபோல பல முக்கிய தலைவர்களையும் ஸ்டாலின் சந்தித்து அழைப்பிதழை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.