மேகதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுக்கே இடமில்லை: சிவி சண்முகம் திட்டவட்டம்

 

மேகதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுக்கே இடமில்லை: சிவி சண்முகம் திட்டவட்டம்

மேகதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை: மேகதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

மேகதாட்டு ராசி மணலில் அணைக்கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசின் வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்யக் கோரி திருச்சியில் திமுக தலைமையில் அதன் தோழமைக் கட்சிகள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த சூழ்நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம். இதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரம் ஒதுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு தற்போது பதிலளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “மேகதாட்டு அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.