மெல்போர்ன் டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி .

 

மெல்போர்ன் டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி .

மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது

மெல்போர்ன்: மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதன் மூலம் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது .

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 169.4 ஒவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளோர் செய்தது .புஜாரா 106 ரன்களும் கோலி 82 ரன்களும் எடுத்திருந்தார் .அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 76 ரன்கள் அடித்திருந்தார் .பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் ,ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் ஹேசில்வுட் ,லியோன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர் .ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 66.5 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது .அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் ,டிம் பெய்ன் இருவரும் 22 ரன்கள் எடுத்தனர்.பும்ரா ஆறு விக்கெட்டுகளை சாய்த்தார் .ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா ,ஷமி தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர் .

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 37.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது .மயங்க் அகர்வால் 42 ரன்களும் ரிஷப் பண்ட் 33 ரன்களும் எடுத்தனர்.பேட் கம்மின்ஸ் ஆறு விக்கெட்டுகளை தனதாக்கிக் கொண்டார் . ஹேசில்வுட் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார் .

ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது . 85 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்களை எடுத்திருந்த நிலையில் முடிவுற்றது நான்காவது நாள் ஆட்டம்.

ஜடேஜா 3 விக்கெட்டுகள் ,பும்ரா மற்றும் ஷமி இரண்டு விக்கெட்டுகள் ,இஷாந்த் ஷர்மா ஓரு விக்கெட் என வீழ்ந்தியிருந்தாலும் ,கடைசி வரை பேட் கம்மின்ஸை வீழ்த்த முடியவில்லை. 61 ரன்கள் எடுத்திருந்தார் அவர் .மறுமுனையில் லியோன் ஆறு ரன் எடுத்து களத்திள் இருந்தார் .

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று பெய்யும் என கணிக்கப்பட்டு இருந்த மழை, எதிர்பார்த்தபடியே வந்ததோடு மட்டுமல்லாமல் ,நாளின் தொடக்கம் முதல் மதிய உணவு இடைவேளைக்கு பின் தொடங்கிய ஆட்டத்தில் ஸ்கோர் 261 ஆக இருந்த போது கம்மின்ஸ் 63 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் .114 பந்துகளை சந்தித்த கம்மின்ஸ் ,5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர்ர் அடித்திருந்தார் .

அடுத்த ஓவரிலேயே அதே ஸ்கோர் இருக்கும்போதே இஷாந்த் ஷர்மா வீசிய பவுன்சரில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து லியோன் ஆட்டமிழக்க ,இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்கள் வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார் .

இத்தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி 2019ஆம் ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டியாக சிட்னியில் ஜனவரி 3ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கும் .

ஏற்கனவே இந்திய அணி ,கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இந்தியாவில் நடந்த நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது . இதனால் பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இந்திய தக்கவைத்துக் கொண்டுள்ளது .

இன்று பெற்ற வெற்றி ,டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா பதிவு செய்த 150ஆம் வெற்றி ஆகும் .இதற்கு முன் இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ,மேற்கத்திய தீவுகள் ,தென் ஆப்பிரிக்கா அகிய அணிகள் இந்த எண்ணிக்கையை எட்டி பிடித்தவை .