மெல்பேர்ன் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்திய அணி

 

மெல்பேர்ன் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்திய அணி

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி உள்ளது.

-குமரன் குமணன்

மெல்போர்ன்: மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி உள்ளது.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூண்ட்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 169.4 ஒவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளோர் செய்தது. ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 66.5 ஓவர்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 27 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுற்றது.

இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டதில் மேலும் 63 பந்துகளை எதிர்கொண்டு 52 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 106/8 (37.3) என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது இந்திய அணி.

8 down….2 to go #AUSvIND pic.twitter.com/UXtwG6z2Em

— BCCI (@BCCI) December 29, 2018

399 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை துரத்த தொடங்கியது ஆஸ்திரேலியா. ஃபிஞ்ச் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே மூன்று ரன்கள் எடுத்த போது பும்ராவால் வெளியேற்றப்பட்டார் . அடுத்த விக்கெட்டாக மார்கஸ் ஹாரிஸை ஜடேஜா வீழ்த்தினார். அடுத்ததாக உஸ்மான் க்வாஜா 33 ரன்களில் ஷமி பந்துவீச்சில் lbw ஆனார். அப்போது அந்த அணியின் ஸ்கோர் 63/3. இதன் பிறகு 114 ரன்கள் என்கிற நிலையில் ஷான் மார்ஷ் 44 ரன்களில் பும்ராவின் பந்துவீச்சில் LBW ஆனார். 72 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரி ஓரு சிக்ஸர் அடித்திருந்தார்.

அடுத்த இரண்டு விக்கெட்டுகளாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிரேவிஸ் ஹெட் ஆகியோரை முறையே அந்த அணியின் ஸ்கோர் 135 மற்றும் 157 ஆக இருந்தபோது ஜடேஜா மற்றும் இஷாந்த் ஷர்மா வெளியேற்றினர். மார்ஷ் 10 ரன்களும் ஹெட் 34 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

டிம் பெய்னை தனது மூன்றாவது விக்கெட்டாக வீழ்த்தினார் ஜடேஜா. நேற்று ரிஷப் பண்டை வம்புக்கு இழுத்து இன்று அவரால் ஏளனம் செய்யப்பட்ட பெய்ன், இறுதியில் ரிஷப் பண்ட் பிடித்த கேட்ச்சால் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போதைய ஸ்கோர் 176/7.

Stumps on Day 4 of the 3rd Test.

Australia 258/8, #TeamIndia 2 wickets away from victory #ASUvIND pic.twitter.com/if6aBFoIT0

— BCCI (@BCCI) December 29, 2018

கடைநிலை வீர்ரகளை விரைவாக ஆட்டமிழக்கச் செய்து இன்றே வெற்றியை இந்திய அணி பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் எட்டாவது விக்கெட்டாக ஸ்டார்க்கை 18 ரன்களில் ஷமி ஆட்டமிழக்கச் செய்வதற்குள் ஆஸ்திரேலிய அணி 215 ரன்களை எட்டியிருந்தது.

ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கம்மின்ஸுக்கு பக்கபலமாக லியோன் நின்றுவிட, கம்மின்ஸ் தனது அரை சதத்தையும் ஆஸ்திரேலியா 250 ரன்களையும் கடப்பதை இந்திய அணி வீரர்கள் வேடிக்கை பார்க்க நேர்ந்தது.

இந்தியாவுக்கு வெற்றி உறுதி என்கிற நிலையிலும் ஆஸ்திரேலிய கடைநிலை வீரர்களின் இந்த போராட்டம் வியப்பளித்தது .கம்மின்ஸ் 61 ரன்களுடனும் லியோன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மீதம் உள்ள இரண்டு விக்கெட்டுகள் எவ்வளவு விரைவில் வீழ்கின்றன என்பதை மட்டுமே இனி பார்க்க வேண்டும். இறுதி நாள் ஆட்டம் நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும்.