மெய்ன்ரோட்ல வேண்டாம் ப்ளீஸ், ரூமுக்குள்ளயே வச்சுக்கலாம்! ஜெயக்குமார் திடீர் முடிவு!

 

மெய்ன்ரோட்ல வேண்டாம் ப்ளீஸ், ரூமுக்குள்ளயே வச்சுக்கலாம்! ஜெயக்குமார் திடீர் முடிவு!

கட்சி என்றால் சிறு சிறு பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அ.தி.மு.கவினர் அமைதியாக இருக்க வேண்டும். உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம். அறையில் விவாதிக்க வேண்டியதை எல்லாம் அம்பலத்தில் விவாதிக்கக் கூடாது.

ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்த அதிமுகவுக்கு தெவசம் பண்ணி ஒன்றரை வருடங்களாகப் போகிறது. இப்போது ஒன்றரை கோடி கொள்கைபரப்பு செயலாளர்கள் தான் இருக்கிறார்கள் அக்கட்சியில். பேட்டி, பத்ரிகையாளர் சந்திப்பு என்றால் என்ன என்பதை கடந்த ஒண்ணேமுக்கால் வருடங்களாகத்தான் அதிமுகவினர் பழகிவருகின்றனர். அதுபோக, கட்சியும் இப்போது அதிமுகவுக்குள்ளேயே இரண்டு, அதிமுகவுக்கு வெளியே என இரண்டு மூன்று பிரிவுகளாக தத்தளித்து வருகிறது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பதுபோல, அதிமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்கள் முதற்கொண்டு அனைவரும் தலைமைக்கு எதிராக, “தலைமை என ஒன்று இருக்கிறதா” என குரல் எழுப்புகின்றனர்.

Jayakumar

ஓசோன் ஓட்டையை தெர்மாகோல் கொண்டு அடைக்க‌ முன்னணி நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். “இன்னும் ரெண்டு வருஷம் இருக்குய்யா, மண்ணள்ளி போட்டுறாதீங்கய்ய்யா” என ஆளுக்கு ஒரு பக்கம் கெஞ்சி வருகின்றனர். இந்நிலையில், கட்சியில் ஆளாளுக்கு பொதுவெளியில் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “கட்சி என்றால் சிறு சிறு பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். அ.தி.மு.கவினர் அமைதியாக இருக்க வேண்டும். உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம். அறையில் விவாதிக்க வேண்டியதை எல்லாம் அம்பலத்தில் விவாதிக்கக் கூடாது” என்று கோரிக்கை விடுத்துள்ளார். மெய்ன்ரோட்ல வேண்டாம், அறையிலேயே வச்சுக்கலாம்னு தலைப்பை பார்த்ததும், ரொம்ப ஆசைஆசையா க்ளிக் பண்ணி உள்ள வந்தீங்கதானே!