மெதுவாக நடக்குறவங்களுக்கு இத்தனை நோய்கள் வருமா? அட என்னப்பா சொல்லுறீங்க!

 

மெதுவாக நடக்குறவங்களுக்கு இத்தனை நோய்கள்  வருமா? அட என்னப்பா சொல்லுறீங்க!

மூளையின் மேற்பரப்பில் சிறிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தது. அதாவது இது வயதானவர்களுக்கான அறிகுறியாகும். 

மெதுவாக நடக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு  45 வயதுக்கு மேல் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மனிதர்களில் வேறுபாடுகள் இருப்பது போல அவர்களின்  நடைகளிலும் வித்தியாசம் இருக்கும். சிலர் மெதுவாக நடப்பார்கள், சிலரோ அவர்களுக்கு அப்படியே எதிர்மறையாக நடையில் வேகத்தை காட்டுவார்கள். 

walk

வேகமாக நடந்தால் என்ன மெதுவாக நடந்தால் என்ன? இதெல்லாம் ஒரு விஷயமா என்று நினைக்கிறீர்களா? உண்மையில் மெதுவாக நடக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு  45 வயதுக்கு மேல் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

walk

அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இதுகுறித்து நடந்த ஆய்வில்  மெதுவாக நடப்பவர்களுக்கு  அல்சைமர் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு மூளையின் மேற்பரப்பில் சிறிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தது. அதாவது இது வயதானவர்களுக்கான அறிகுறியாகும். 

அதேபோல் வேகமாக நடப்பவர்களை விட மெதுவாக நடப்பவர்களுக்கு ஐ.க்யூ திறன் குறைவாக  உள்ளது என்று அதனால் வேகமாக நடப்பதால் நமக்கு பல நன்மைகள் வந்து சேரும் என்றும் சொல்கின்றனர் ஆய்வாளர்கள். 

என்ன அதுக்குள்ள நடக்க கிளம்பிடீங்க போல…