மெட்ரோ ரயில் நிலையத்தில் மல்டி லெவல் பார்க்கிங்… ஐந்து பைக்கை கூடுதலாக நிறுத்தலாம்!

 

மெட்ரோ ரயில் நிலையத்தில் மல்டி லெவல் பார்க்கிங்… ஐந்து பைக்கை கூடுதலாக நிறுத்தலாம்!

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மல்டி லெவல் இருசக்கர வாகன நிறுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ஐந்து வாகனங்களை மட்டுமே நிறுத்த முடியும்.
சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மல்டி லெவல் இருசக்கர வாகன நிறுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ஐந்து வாகனங்களை மட்டுமே நிறுத்த முடியும்.
சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படக்கூடிய வாகன நிறுத்துமிட பிரச்னையை சமாளிக்க சென்னை மெட்ரோ நிறுவனம் தற்போதே களமிறங்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னைமீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனங்களுக்கான மல்டி லெவல் பார்க்கிங் வசதியை அது அறிமுகம் செய்துள்ளது. தொடக்க நிலை என்பதால் ஐந்தே ஐந்து பைக்குகளை மட்டுமே கூடுதலாக நிறுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

meenambakam metro station

இது குறித்து மெட்ரோ ரயில் இயக்குநர் நரசிம்ம பிரசாத் கூறுகையில், “மக்களின் பயன்பாட்டுக்காக மல்டி லெவல் பார்க்கிங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு இதன் செயல்பாட்டைக் கண்காணிப்போம். இதற்கு கிடைக்கும் வரவேற்பு அடிப்படையில், அதிகப்படியான மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்கப்படும்” என்றார். 
இந்த இயந்திரம் பயன்படுத்த எளிமையானது என்றும், கீழே இறங்கும்போது புவி ஈர்ப்பு விசையைப் பயன்படுத்துவதால் மிகக் குறைந்த மின்சாரம் மட்டுமே செலவாகும் என்றும் கூறப்படுகிறது. மல்டி லெவல் பார்க்கிங் அறிமுகம் செய்யப்பட்டதால் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது போன்ற பார்க்கிங் வசதி வடபழனி ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.