மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் வேண்டாம் ! ஸ்மார்ட் வாட்ச் போதும் !

 

மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் வேண்டாம் !  ஸ்மார்ட் வாட்ச் போதும் !

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் எடுக்க வேண்டாம் எனவும் அதற்காக பிரத்யேக ஸ்மார்ட் வாட்ச் விற்பனைக்கு வர உள்ளதாகவும் சி.எம்.ஆர்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் எடுக்க வேண்டாம் எனவும் அதற்காக பிரத்யேக ஸ்மார்ட் வாட்ச் விற்பனைக்கு வர உள்ளதாகவும் சி.எம்.ஆர்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணம் செய்ய மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் மெட்ரோ ரயில் என்றே சொல்லலாம். ஆரம்பத்தில் மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகம் எனற விமர்சனம் எழுந்த நிலையில், கட்டணச் சலுகைகள் அறிவித்து பயணிகளை தன் பக்கம் இழுத்து வருகிறது மெட்ரோ ரயில் நிர்வாகம்.

metro

அதற்கு கிடைத்த பலனாக சென்னையில் நாள்தோறும் ஒரு லட்சம் பயணிகள் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

எப்போதாவது பயணம் செய்பவர்களுக்கு டோக்கன் முறையிலும், தினசரி பயன்படுத்துவோருக்கு ஸ்மார்ட் கார்டு பயண அட்டையும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. சில சமயம் ஸ்மார்ட் கார்டு எடுத்து வர மறந்துவிட்டால் மீண்டும் டோக்கன் வாங்கி பயணம் செய்ய வேண்டும். அந்த பிரச்சனையை களைய கையில் கட்டும் கடிகாரத்திலேயே புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது மெட்ரோ நிர்வாகம். வழக்கமாக வாட்ச் கட்டுவது போல இந்த வாட்ச் 1,000 ரூபாய் வாங்கி கட்டிக்கெண்டால் போதும் ரயில் நிலையத்திற்குள் நீங்கள் கையை காட்டிவிட்டால் கதவு திறக்கும். இந்த புதிய சிப் அடங்கிய வாட்சுகள் டைட்டன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. செல்போன் நம்பரை போல இதற்கு ஒரு எண் கொடுக்கப்பட்டு அதை ரீசார்ஜ் செய்து கொண்டால் போதும் என்கிறது மெட்ரோ ரயில் நிர்வாகம். அதுசரி ஒருவேளை வாட்ச்சையே சிலர் கட்டுவதற்கு மறந்து வந்துவிட்டு ரயில் நிலையம் வருவார்கள் என்ன செய்வது என நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஒரே பதில் வேறு என்ன? டோக்கன் வாங்கிக் கொண்டு பயணம் செய்யுங்கள் அவ்வளவுதான்.