மெட்ரோ ரயிலிலும் கைவைத்த பா.ஜ.க…! கதறும் ஊழியர்கள்!?

 

மெட்ரோ ரயிலிலும் கைவைத்த பா.ஜ.க…! கதறும் ஊழியர்கள்!?

அரசு சார்ந்த துறைகளில் பெரும் குறைபாடு இருப்பதாக காட்டி, அரசு பணியாளர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி கார்ப்ரேட்டுகள் கையில் அனைத்தையும் ஒப்படைக்க மோடி அரசாங்கம் முனைப்புடன் இயங்கி வருகிறது.

தனியார்மயமாக்குதலை முனைப்புடன் செயல்படுத்தி வரும் பாஜக அரசாங்கம், மெட்ரோவிலும் தங்கள் வேலையை காட்ட துவங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசும் ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி, 3 தொழில்நுட்ப துறை பணியாளர், 2 மெட்ரோ நிலைய கட்டுப்பாட்டாளர், 2 போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் மற்றும் 1 இளநிலை பொறியாளர் ஆகிய 8 பேரை மெட்ரோ நிர்வாகம் பணிநீக்கம் செய்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

vxxff

மெட்ரோ ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் காரணத்தால் இந்த பணி நீக்க விவகாரம் போராட்டமாக மாறியது. இந்த பணி நீக்கத்தை கண்டித்து கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் நேற்று சக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. அந்த வேளையில், மெட்ரோ அதிகாரிகளால் சில ஊழியர்கள் தாக்கப்பட்டதாக செய்தி பரவியதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. உள்ளே நுழைய முயன்ற ஊழியர்களை காவலர்கள் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

sdg

இதுகுறித்து மெட்ரோ ஊழியர்கள், பணி நேரத்தை 14 மணி நேரமாக மாற்றியிருக்கிறார்கள். சரியாக விடுமுறை வழங்குவதில்லை, இது எங்கள் மன அழுத்ததை அதிகரிக்கிறது. தற்போது சங்கம் அமைத்ததை நிர்வாகத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்காகதான் 8 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள். நிரந்தர பணியாளர்களை விரட்டிவிட்டு ஒப்பந்த முறையில் ஊழியர்களை நியமிக்க திட்டம் தீட்டி வருகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ நிர்வாகம், அந்த 8 நபர்களும் விதிமுறைகளை மீறி ஒழுங்காக பணி செய்யாததால் நீக்கப்பட்டதாக கூறுகிறது. சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கத்தின் தலைவரும், சிஐடியூ தமிழ் மாநிலக்குழு தலைவருமான அ.சவுந்தரராஜன் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இதுதொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போராட்டத்தை முடித்து வைத்தார். அதன்படி தற்போது மெட்ரோ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

zgfb

தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, நியாயம் கிடைத்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லை என்றால் தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்ந்த துறைகளில் பெரும் குறைபாடு இருப்பதாக காட்டி, அரசு பணியாளர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி கார்ப்ரேட்டுகள் கையில் அனைத்தையும் ஒப்படைக்க மோடி அரசாங்கம் முனைப்புடன் இயங்கி வருகிறது. அதற்கு ஆதரவாக இருக்கும் மாநில அரசுகளால் அரசு ஊழியர்கள் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்.