மெட்ரோ ட்ரெயின், லோக்கல்  ட்ரெயின் மற்றும் பஸ் எல்லாத்துக்கும் ஒரே டிக்கெட் வரப்போகுது!

மெட்ரோ ட்ரெயின், லோக்கல்  ட்ரெயின் மற்றும் பஸ் எல்லாத்துக்கும் ஒரே டிக்கெட் வரப்போகுது!

இறுதியாக சென்னையில் மெட்ரோ ரயில், புறநகர் ரயிகள் மற்றும் பேருந்துகள் அனைத்திற்கும் பொதுவான டிக்கெட் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். வியாழக்கிழமை அன்று, உலக வங்கி தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில் லிமிடெட் மற்றும் சென்னை  போக்குவரத்துக்கு கழக அதிகாரிகளுடன் சந்திப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

metro-rails

இந்தியாவின் முன்னணி நகரங்களில் அனைத்து போக்குவரத்துக்கு நிலைகளுக்கும் பொதுவான கார்டு மூலம் டிக்கெட் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒவ்வொரு போக்குவரத்துக்கு நிலையங்களிலும் அடுத்த வண்டியின் நேரம் குறிப்பிடும் டிஜிட்டல் போர்டுகளுடன் தங்குதடையற்ற போக்குவரத்தை வழங்கிட உலகவங்கி இந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளது. 

உதாரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஏர்போர்ட் வரை செல்லும்  அடுத்த மெட்ரோ ட்ரெய்னின் நேரம் சென்ட்ரல் ரயில்நிலையத்தின் டிஜிட்டல் போர்டுகளில் அறிவிக்கப்படவேண்டும். அதே போல் அங்கிருந்து செல்லும் புறநகர் ரயில்கள் மற்றும் பேருந்துகளின் நேரமும் அறிவிக்கப்படவேண்டும்.

suburban-train-79

இந்த திட்டத்திற்காக பயன்களின் தகவல்களை சேகரிப்பது தான் இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் என்று சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். “மெட்ரோ ரயில் புறநகர் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிபோரின் எண்ணிக்கையை கணக்கெடுக்குமாறு உலக வங்கி கேட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.