மெட்ரோ இ-பைக் சேவை: வெறும் 20 ரூபாய் கொடுத்து ஒருநாள் முழுக்க ஊரை சுற்றலாம்!

 

மெட்ரோ இ-பைக் சேவை: வெறும் 20 ரூபாய்  கொடுத்து ஒருநாள் முழுக்க ஊரை சுற்றலாம்!

கூட்ட நெரிசல் இல்லாத அதிவிரைவில் செல்லும் இந்த பயணம் பலரையும் கவர்ந்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கூட்ட நெரிசல் இல்லாத அதிவிரைவில் செல்லும் இந்த பயணம் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் மக்களுக்கு தேவையான  பல புதிய திட்டங்களையும் மெட்ரோ அறிமுகப்படுத்தி வருகிறது.  

metro

அந்த வகையில் கிண்டி, ஆலந்தூர் ஆகிய இரு மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் சுமார் 20 VOGO நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மக்கள்  பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

20 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்துவிட்டு ஒருநாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நாம் எடுத்து செல்லலாம். இறுதியில் 1 கிமீ பயணத்திற்கு 4 ரூபாய் என்ற விதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். 10 மணி நேரத்திற்கும் மேல் பயன்படுத்தினால் 1 மணி நேரத்திற்கு 36 ரூபாய் கூடுதல் கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. 

புக்கிங் செய்வது எப்படி? 

metro

  • VOGO எனும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
  • பெயர், மின்னஞ்சல் முகவரி, ஓட்டுநர் உரிமத்தைப் பதிவு செய்ய வேண்டும்
  • புகைப்படம் பதிவேற்றம்  செய்ய வேண்டும் 
  • வாகனத்தின் QR கோடை ஸ்கேன் செய்ய வேண்டும் 

 

இந்த திட்டம் பலருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டுமே உள்ள இந்த திட்டம், மக்களின் வரவேற்பை பொறுத்து அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.