மெட்டி ஒலி, நாதஸ்வரம் தொடரின் பிரபல நடிகர் மரணம்!

 

மெட்டி ஒலி, நாதஸ்வரம் தொடரின் பிரபல நடிகர் மரணம்!

மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமான  சின்னதிரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43.

பழனி: மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமான  சின்னதிரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43.

இயக்குநர் திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்துப் பிரபலமானவர் விஜயராஜ். திண்டுக்கல் மாவட்டம், பழனியை பூர்விகமாகக் கொண்ட இவர்  எம் மகன் உள்ளிட்ட சில  ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சித் தொடர்களான நாதஸ்வரம், கோலங்கள் ஆகியவற்றிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். இவருக்குத் திருமணமாகி 8 வயதில் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தீபாவளியை கொண்டாடத் தனது சொந்த ஊரான பழனிக்குச் சென்ற விஜயராஜிற்கு நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலைச் சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.