மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச்: தல அஜித்தின் ‘தக்ஷா டீம்’ 2வது இடம்!

 

மெடிக்கல் எக்ஸ்பிரஸ் யுஏவி சேலஞ்ச்: தல அஜித்தின் ‘தக்ஷா டீம்’ 2வது இடம்!

தல அஜித் ஆலோசகராக உள்ள ‘தக்ஷா டீம்’ உலக டிரான் ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

சென்னை: தல அஜித் ஆலோசகராக உள்ள ‘தக்ஷா டீம்’ உலக டிரான் ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா ஏன்ற மாணவர் குழுவினர், நடிகர் அஜித்தின் ஆலோசனையின்படி உருவாகிய ஆளில்லா விமானம் சுமார் 6 மணிநேரம் விண்ணில் பறந்து, உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது. கல்லூரிகளுக்குள் நடந்த இந்த போட்டியில் முதல் இடத்தையும் அஜித்தின் தக்ஷா டீம் தட்டிச் சென்றது.

daksha

இந்நிலையில், டிரான் ஒலிம்பிக் போட்டிக்கு உலகளவில் இருந்து 13 குழுக்கள் தேர்வாகியுள்ளன. அதில் இந்தியா சார்பாக அஜித்தின் தக்ஷா குழு தேர்வு செய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்காக ‘விஸ்வாசம்’ ஷூட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு மாணவர்களுக்கு அஜித் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான மெடிக்கல் எக்ஸ்பிரஸ்– 2018 யுஏவி சேலஞ்ச் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளில் இந்தியாவின் ‘தக்ஷா’ டீம் இரண்டாவது இடத்தைத் தட்டிச் சென்றுள்ளது. முதலிடத்தை மோனாஷ் யுஏஎஸ் என்ற அணி பிடித்துள்ளது. 

uavchallenge

கார், பைக் ரேஸ்களில் உள்ள ஆர்வத்தை தாண்டி, அஜித்துக்கு ஏரோ மாடலிங்கிலும் ஆர்வம் உண்டு. விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ள அஜித், ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களுக்கு ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக அஜித் நியமிக்கப்பட்டார்.

uavchallenge

நடிப்பையும் தாண்டி உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள தல அஜித்திற்கும், அஜித்தின் ஆலோசனைகளை கொண்டு இந்த சாதனையை நிகழ்த்திக்காட்டிய மாணவர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.