மெக்காவுக்கு சென்ற பிரபல இயக்குநர் மகன் உயிரிழப்பு…சோகத்தில் குடும்பத்தினர்!

 

மெக்காவுக்கு சென்ற பிரபல இயக்குநர் மகன் உயிரிழப்பு…சோகத்தில் குடும்பத்தினர்!

வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சீரியல்களிலும் தலைகாட்டி வருகிறார். 

இயக்குநர் ராஜ்கபூரின் மகன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 23.

தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, உத்தமராசா, சமஸ்தானம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர் இயக்குநர்  ராஜ் கபூர். அத்துடன் தாஜ்மஹால், விசில், வின்னர், அரண்மனை, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சீரியல்களிலும் தலைகாட்டி வருகிறார். 

ttn

இந்நிலையில் ராஜ் கபூரின் மகனான 23 வயதாகும் ஷாரூக் கபூரின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து உடல்நிலை சரியானால் மெக்காவுக்கு புனிதப்பயணம் செல்ல வேண்டுதல் வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி தனது அம்மாவுடன் ஷாரூக் புனிதப்பயணம் சென்றுள்ளார். ஆனால்  வெப்பநிலை மாற்றத்தாலும், சளித்தொல்லையாலும் ஷாரூக்கிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் சில மணிநேரங்களில் அவர் மரணமடைந்துள்ளார். 

ttn

இந்த சம்பவம் ராஜ் கபூர் குடும்பத்திற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஷாரூக் கபூர் உடல் மெக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ராஜ் கபூருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும்,  ஷமீமா கபூர், ஷானியா கபூர் என்ற இரண்டு மகள்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.