மெக்காவுக்கு,ஹஜ் பயணம் போவது எல்லோருக்கும் தெரியும்…அந்த மெக்காவின் வரலாறு தெரியுமா..!?

 

மெக்காவுக்கு,ஹஜ் பயணம் போவது எல்லோருக்கும் தெரியும்…அந்த மெக்காவின் வரலாறு தெரியுமா..!?

‘மதினா நகருக்கு போகவேண்டும்,மன்னர் முகமதை காணவேண்டும்,’ என்று நாகூர் அனீபாவின் கனீர் குரலால் நமக்கு மெக்காவும் மதினாவும் அறிமுகமாகி அதிகம் போனால் ஐம்பது ஆண்டுகள் ஆகி இருக்கலாம்! ஆனால் தொழிற் புரசிக்குப் பிறகு ,தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை விற்கவும் அதற்குத் தேவையான மூலப் பொருட்களை தேடியும் கிளம்பிய ஐரோப்பியருக்கு பெரும் புதிராய் இருந்தது இஸ்லாமிய உலகம்

 

mecca

‘மதினா நகருக்கு போகவேண்டும்,மன்னர் முகமதை காணவேண்டும்,’ என்று நாகூர் அனீபாவின் கனீர் குரலால் நமக்கு மெக்காவும் மதினாவும் அறிமுகமாகி அதிகம் போனால் ஐம்பது ஆண்டுகள் ஆகி இருக்கலாம்! ஆனால் தொழிற் புரசிக்குப் பிறகு ,தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை விற்கவும் அதற்குத் தேவையான மூலப் பொருட்களை தேடியும் கிளம்பிய ஐரோப்பியருக்கு பெரும் புதிராய் இருந்தது இஸ்லாமிய உலகம்.

mecca

அவர்களால் இஸ்லாமியரை புரிந்து கொள்ள முடியவில்லை.அவர்களை பொறுத்தவரை யூதர்கள் பாதி எதிரிகள்,இஸ்லாமியர் முழு எதிரிகள். ஆனால்,ரிச்சர்ட் பர்ட்டன் ( ஹாலிவுட் நடிகனல்ல,இவரை வைத்துத்தான் , ஸ்பீல் பெர்க்கின் இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரம் உருவாக்கப் பட்டது)அவர் இங்கிலாந்தில் பிறந்து, தன் வாழ்வின் பெரும்பகுதியை பயணங்களிலேயே கழித்தவர்.

அனேகமாக மெக்கா,மதீனாவை தரிசித்த முதல் ஐரோப்பியர் அவராகத்தான் இருக்க வேண்டும்.அவருக்கு அடுத்தவர் ஸ்னூவக் ஹர்குரோன் ஜி என்கிற டட்ச்காரர்.இவர் இஸ்லாத்தை தழுவி 1885-1885 காலகட்டத்தில் மெக்காவில் வாழ்ந்து ஏகப்பட்ட புகைப்படங்கள் வழியாக அன்றைய மெக்காவை பதிவு செய்திருக்கிறார். அத்தனை புகைப்படங்களையும் நெதர்லாந்தை நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.

mecca

 

மேற்கு சவுதி அரேபியாவில் சிராட் மலைத்தொடருக்கும் ,செங்கடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் மெக்காதான் இஸ்லாமியரின் புனித தளங்களில் உச்சம்.இறைத்தூதர் முகமது பிறந்த இடம் இது.இஸ்லாமியர் ஒவ்வொருவரும், வாழ்நாளில் ஒருமுறையேனும் செல்ல விரும்பும் இடம்.மெக்காவுக்கு செல்லும் பயணம் ‘ ஹஜ்’ என்றும்,சென்று வந்தவர் ஹாஜி என்றும் அழைக்கப்படுவது வழக்கம்.

மெக்கா கடல் மட்டத்திலிருந்து 909 அடி உயரத்தில் வற்றிப்போன வாடி இப்றாஹிம் ,மற்றும் அதன் துணை நதிகளின் பாதையில் அமைந்திருக்கிறது. மெக்காவை சூழ்ந்திருக்கும் சிர்ராட் மலைத்தொடரில் அஜ்யாட் 1332 அடிஉயரமும், அபு குபாய்ஸ் 1220 அடி உயரமும், க்யோக்வான் சிகரம் 1401 அடி உயரமும் கொண்டவை.

mecca

இதுதவிர வடகிழக்கில் அமைந்திருக்கும் ஹிரா மலைத்தொடர் 2080 அடி உயரம் கொண்டது.இதில் அமைந்திருக்கும் குகை இஸ்லாமியருக்கு மிகவும் புனிதமானது. இங்குதான் இறைத்தூதர் நபிக்கு அவர்களது புனித நூலான குரான் அருளப்பட்டது. மெக்காவுக்கு தெற்கில் அமைந்திருக்கும் த்வார் மலைத்தரும் புனிதமானதே,இங்கேதான் 
முகமது நபி மறைந்து வாழ்ந்தார்.அதிலிருந்துதான் இஸ்லாமியர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.இஸ்லாமியர் நம்பிக்கைப்படி மெக்காவின் சரித்திரம் இப்றஹிமும் அவரது மகன் இஸ்மாயீல் இருவரும்தான் இந்த நகரை நிர்மானித்தார்கள்.

mecca

கிமு 100 ஜுர்ஹாம் எனப்படும் ஏமன் பழங்குடியினர் இந்த பகுதியை ஆண்டனர்.
கி.பி 623ல் முகமது நபி மக்களிடையே தனது போதனையை துவங்கினார்
கிபி 622ல் முகமது நபி மெக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணப்பட்டார்
கிபி 629லேயே இந்தியாவில் கேரளத்துக்கும் சீனாவுக்கும் நபியின் சீடர்களால் இஸ்லாம் பரவியது.

mecca

கிபி 793 ஹரூன் அல் ரஷீத் விஜயம்
கிபி 930,மெக்கா , கார்மேதியர்கள் அபுதாகீர் தலைமையில் சூறையப்பட்டு புனிதமான கருப்புக்கல் எடுத்துச்செல்லப்பட்டது.
951 புனித கருப்புக்கல் மெக்காவுல்கு திரும்பியது.
கிபி 1326 இபின் பதூதா மெக்காவுக்கு வருகைதந்தார்.
கிபி 1517 இரண்டு புனிதத்தலங்களும் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் ஆளுகையின் கீழ் வந்தன.
கிபி 1630 பெருவெள்ளம்
கிபி 1631 புனித கபா மீண்டும் நெதர்லாந்து
கிபி 1802 – 03 சவுதியின் வஹாபியர்களால் மெக்கா கைப்பற்றப்பட்டது.
கிபி 1812-13 எகிப்த்திய படைகளால மெக்கா மீட்கப்பட்டது
கிபி 1880 மார்ச் 21 ஷெரீஃப் கொல்லப்பட்டார்
கிபி 1885 ,மெக்காவின் மக்கள் தொகை 45000 ஆனது
அச்சியந்திரம் அறிமுகமானது.
1908 டமாஸ்கஸ் – மெக்கா ரயில்பாதை இயங்கத் தொடங்கியது
1921 மெக்காவின் மக்கள் தொகை 80000 ஆனது
1925 மெக்கா சவுதி அரேபியாவுடம்இணைந்தது
1926 முதல் பள்ளி துவங்கப்பட்டது
1929 நகராட்சியானது
1931 பொது நூலகம் துவக்கப்பட்டது
1945 ஸ்போர்ட்ஸ் கிளப் அமைக்கப்பட்டது .
1951 கல்லூரி வந்தது.
1958 முதல் செய்திதாள் ‘ அல் நட்வா’ வெளியானது
1960 காவல் துறை ஏற்படுத்தப்பட்டது.
அடிமை முறை ஒழிப்பு,மக்கள் தொகை 158’908 ஆனது.
1972 தொலைக்காட்சி அறிமுகம்
1975 மினா தீ விபத்து
1981 பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1992 மக்கள் தொகை 965,697 ஆனது.
1997 ஏப்ரல் 16 மெக்கா தீ விபத்து