மெக்கானிக் ஷாப் உரிமையாளரால் கொல்லப்பட்ட மெக்கானிக் -அப்பாவியை கொன்றதாக அப்பா ,மகன் கைது  … 

 

மெக்கானிக் ஷாப் உரிமையாளரால் கொல்லப்பட்ட மெக்கானிக் -அப்பாவியை கொன்றதாக அப்பா ,மகன் கைது  … 

பஞ்சாப்பில், மெக்கானிக் பிந்து (24) மானுகே கிராமத்தில் ஒரு பட்டறையில் ஐந்து ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு குல்விந்தர் சிங் யாரிடமும் எதுவும் சொல்லாமல் பட்டறையிலிருந்து வெளியே போய் விட்டார். அதனால் அவரின் , குடும்பத்தினர்  அவரைத் தேடிக்கொண்டிருந்தனர்,

ஒரு பட்டறை மெக்கானிக்கின் சடலம் வியாழக்கிழமை வயல்வெளியில்  ஒரு மரத்தில் தொங்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில், இறந்தவரின்  சகோதரரின் புகாரின் அடிப்படையில், அதே பட்டறையின் உரிமையாளர்களான தந்தை மற்றும் மகன்  மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

crime-scene-90

பஞ்சாப்பில், மெக்கானிக் பிந்து (24) மானுகே கிராமத்தில் ஒரு பட்டறையில் ஐந்து ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு குல்விந்தர் சிங் யாரிடமும் எதுவும் சொல்லாமல் பட்டறையிலிருந்து வெளியே போய் விட்டார். அதனால் அவரின் , குடும்பத்தினர்  அவரைத் தேடிக்கொண்டிருந்தனர், அப்போது திடீரென வியாழக்கிழமை காலை, கிராமத்தில் வசிக்கும் விவசாயி தார் சிங்கின் பண்ணையில் குல்விந்தர் சிங்கின் உடல் மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. கிடைத்த செய்திப்படி, குல்விந்தரின் உடல் தரையில் பாதியில் கிடந்ததாகவும், அவரது உடலிலும் கழுத்திலும் அதிகமான காயங்கள் இருந்ததாகவும், குல்விந்தர் சிங்கைக் கொன்ற பிறகு, அவரது உடல் மரத்தில் கட்டி தொங்கவிட்டு அதை  தற்கொலை என நிரூபிக்க முயன்றது தெளிவாகத் தெரிகிறது. 

இந்த வழக்கில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் உடலைக் கைப்பற்றினர், அதன் பின்னர் வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இறந்தவரின் குடும்பத்தினர், ‘குல்விந்தர் சிங்கின் பணிமனை உரிமையாளர் ரஞ்சித் சிங் மற்றும் அவரது மகன் ஜஸ்பால் சிங் உட்பட அதே பட்டறையில் பணிபுரிந்த ஸ்வர்ன் சிங்,ஆகியோர்  குல்விந்தர் சிங்கைக் கொன்று அவரது உடலை மரத்தில் தொங்கவிட்டனர் என்று குற்றம் சாட்டினார். அதன்பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது .