மூல நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்! 

 

மூல நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்களும் வழிபாட்டு கோயில்களும்! 

மூல நட்சத்திர காரர்களின் குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் வழிபட வேண்டிய கோயில்களை பற்றி பார்போம்.

தனுசு ராசியில் குருவை அதிபதியாகக் கொண்டவர்கள் மூல நட்சத்திரகாரர்கள். அறிவையும் புகழையும் பெற பெரிதும் முயற்சிப்பார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள்.

அமர்ந்திருக்கும் சிங்கத்தைப் போல் தோற்றமளிக்கும் ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் மூலம் நட்சத்திரம் ஆகும். தனுசு ராசியில் பூரண நட்சத்திரமாக இது அமைந்துள்ளது. 

moolam

கேதுவின் ஆதிக்கத்தில் வரும் மூன்றாவது நட்சத்திரம் மூலம் ஆகும். இவர்களுக்கு இசையிலும் மற்ற கலைகளிலும் நாட்டம் இருக்கும். யானைக்கு வாலாக இருப்பதைவிடவும் ஈக்கு தலையாக இருப்பது மேல் எனும் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.

பிறருக்கு உதவுவதில் நாட்டமும் தர்ம சிந்தனையும் அதிகம் இருக்கும். உணர்ச்சிவசப்படுதலும், கோபமும் இவர்கள் உடன் பிறந்த ஒன்றாகும். ஆழ்ந்த தெய்வ பக்தியும், குடும்பத்தில் பாசமும் இவர்களது சிறப்பான குணங்கள் ஆகும். 

தனுசு ராசியில் இருக்கும் சந்திரனை மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளில் ஏதேனும் ஒரு ராசியில் இருக்கும் குரு பார்த்தால் அந்த ஜாதகருக்கு நாடாளும் யோகம் ஏற்படும் என்று பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

moolam

அனுமனின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பெற்றோரையும் பெரியோர் களையும் மதித்து நடப்பீர்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளை வேத வாக்காக நினைத்துச செயல்படுவீர்கள்.

ஆன்மிக சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். கல்வியறிவும் சிறந்த பேச்சாற்றலும் பெற்றிருப்பீர்கள். இளம் பருவத்திலேயே சுக்கிர திசை வந்து விடுவதால், கலைத்துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பு உண்டாகும். எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். 

கலை,விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். எப்படிப்பட்ட பிரச்னைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.புதுப்புது ரகங்களில், டிசைன்களில் ஆடைகளையும் ஆபரணங்களையும் வாங்கி குவிப்பதில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். 

moolam

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், ஆஞ்சநேயர்

வழிபடவேண்டிய கோயில்கள் : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் , நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்களுக்கு மூல நட்சத்திர நாளில் சென்று வழிபாடு செய்வதால் சகல விதமான நன்மைகளையும் பெறலாம்.

சென்னை அருகில் உள்ள மப்பேடு சிவன் கோயிலுக்கு உங்களது ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபாடு செய்வது பல்வேறு மேன்மைகளை தரும்.