மூர்த்தி மில்லிகிராம் அளவுக்கு சிறியதானாலும், கீர்த்தி மணிக்கணக்கில் நீளும் போதைப்பொருள்!

 

மூர்த்தி மில்லிகிராம் அளவுக்கு சிறியதானாலும், கீர்த்தி மணிக்கணக்கில் நீளும் போதைப்பொருள்!

2 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 120 பேருக்கு தேவையானதாம். தனிநபருக்கெல்லாம் மில்லி கணக்கில்தான். மில்லி கணக்கில் கூடுதலாக எடுத்துக்கொண்டாலும் சங்குதானாம். மிகக்குறைவான அளவிலான பவுடரே 500 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

கேரளாவில் எம்.டி.எம்.ஏ ரக போதைப் பொருள்களின் கடத்தலும் புழங்கலும் அதிகம். இதுகுறித்து கேரள போலீசார் விரிவான விசாரணையில் இருந்தபோது, பெங்களூருவில் இருந்து ஷெபி என்ற மாணவர், எம்.டி.எம்.ஏ. ரக போதைப்பொருளை கடத்திக்கொண்டு திருச்சூருக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலின்படியே, திருச்சூரில் வைத்து ஷெபியை கைது செய்தனர். ஆனால், ஷெபியிடம் இருந்ததோ வெறும் 2 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப் பவுடர்தான். வெறும் 2 கிராமை வைத்து கடத்தல் கேஸ் எப்படிப் போடுவது என போலீசார் கவலையில் இருக்கும்போதுதான் அவர்களுக்கு வேறொரு தகவல் கிடைக்கிறது.

MDMA

இந்த 2 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 120 பேருக்கு தேவையானதாம். தனிநபருக்கெல்லாம் மில்லி கணக்கில்தான். மில்லி கணக்கில் கூடுதலாக எடுத்துக்கொண்டாலும் சங்குதானாம். மிகக்குறைவான அளவிலான பவுடரே 500 ரூபாய்க்கு விற்கிறார்கள். உட்கொண்டதிலிருந்து 45 நிமிடங்களுக்குப் பிறகு வேலையை பார்க்கத் தொடங்கும் இந்தப் போதைப்பொருள், 9 மணி நேரம் சுய நினைவை மறக்கச் செய்யும் அளவுக்கு அபாயகரமானது. நைஜீரியாவைச் சேர்ந்த  பெஞ்சமில் பிராணோ என்பவர்தான் ஹோல்சேல் டீலர் என்பதை அறிந்து, அவரை கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.