மூன்றே மாதத்தில் 2 கோடியே 86 லட்சம் சந்தாதாரர்களை கவர்ந்த டிஸ்னி+ !

 

மூன்றே மாதத்தில் 2 கோடியே 86 லட்சம் சந்தாதாரர்களை கவர்ந்த டிஸ்னி+ !

பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் டிஸ்னி+ மூன்றே மாதங்களில் 2 கோடியே 86 லட்சம் சந்தாதாரர்களை கவர்ந்துள்ளது.

கலிபோர்னியா: பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் டிஸ்னி+ மூன்றே மாதங்களில் 2 கோடியே 86 லட்சம் சந்தாதாரர்களை கவர்ந்துள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் ‘டிஸ்னி+’ என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளம் தொடங்கப்பட்டது. இது பிரபல நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் டிஸ்னி+ தளமானது ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு மூன்றே மாதங்களில் சுமார் 2 கோடியே 86 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இந்த தளம் கவர்ந்துள்ளது. கடந்தாண்டு இறுதி வரை டிஸ்னி+ தளமானது 2 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றிருந்தது. இருந்தாலும், டிஸ்னி+ தளத்திற்காக அதிக முதலீடு செய்யப்பட்டிருப்பதால் அந்த நிறுவனத்திற்கு 23 சதவீதம் லாப சரிவு ஏற்பட்டுள்ளது.

disney 23

வருகிற 2024-ஆம் ஆண்டுக்குள் சுமார் 6 கோடி முதல் 9 கோடி சந்தாதாரர்களை கவர வேண்டும் என்று டிஸ்னி+ தளத்தின் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. டிஸ்னி+ தளத்தில் ஒரிஜினல் சீரீஸ் பிரிவில் ‘ஸ்டார் வார்ஸ்: தி மன்டலோரியன்’ என்ற வெப் சீரீஸின் முதல் சீசன் வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்றது. இதன் அடுத்த சீசன் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் டிஸ்னி+ தளத்தை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், ஆப்பிள் டிவி மற்றும் ஆண்ட்ராய்டு டிவி, அமேசான் சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வருகிற மார்ச் 29-ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் டிஸ்னி+ தளத்தின் சேவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.