மூன்றே நிமிடத்தில் 3700 பேரை வேலையைவிட்டுத் தூக்கிய ஊபர்!

மூன்றே நிமிடத்தில் 3700 பேரை வேலையைவிட்டுத் தூக்கிய ஊபர்!

கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவும் முடங்கியுள்ளது. பொது ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடு இருந்தாலும் தினமும் புதுப்புது நோயாளிகள் மருத்துவமனையை நாடுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அமெரிக்காவில் ஊபர் நிறுவனம் மூன்றே நிமிடங்களில் 3700 பேரை வேலையை விட்டு தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவும் முடங்கியுள்ளது. பொது ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடு இருந்தாலும் தினமும் புதுப்புது நோயாளிகள் மருத்துவமனையை நாடுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக அமெரிக்காவின் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் செலவைக் குறைக்க ஆட்குறைப்பில் இறங்கியுள்ளன. அவசரக்காலத்தில் தொழிலாளர்களை காக்க வேண்டிய நிறுவனங்கள், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஆட்குறைப்பு செய்வதை தவிர்க்க முடியாது என்கின்றன.

uber-67

இந்த நிலையில் பிரபல கேப் நிறுவனமான ஊபர், தன்னுடைய பணியாளர்கள் 3700 பேரை ஆன்லைன் கான்ஃபரன்சிங் கூட்டம் ஒன்றுக்கு அழைத்தது. கூட்டம் தொடங்கியதம், இதுதான் நீங்கள் ஊபரில் வேலை செய்யும் கடைசி நாள் குண்டைத் தூக்கிப் போட்டனர். வெறும் 3 நிமிடங்களில் மீட்டிங் முடிந்தது.
கோவிட்19 பாதிப்பு காரணமாக ஊபர் நிறுவனத்தின் வருவாய் 50 சதவிகிதத்துக்கு மேல் குறைந்துள்ளது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இந்த கடினமான முடிவை எடுத்ததாக அதன் மேலாளர் ரஃபின் சாவேலியோ தெரிவித்துள்ளார். ஆட்குறைப்பு இத்தோடு முடிந்துவிடவில்லை, இன்னும் தொடரும் என்றும் அந்த நிறுவனம் பீதியைக் கிளப்பியுள்ளது.