மூன்றே நாளில் மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி!

 

மூன்றே நாளில் மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி!

உங்கள் செல்போன் நெட்வொர்க் சரியில்லை என்று கருதினால், மூன்றே நாளில் வேறு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும் போர்ட்டபிளிட்டி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் செல்போன் நெட்வொர்க் சரியில்லை என்று கருதினால், மூன்றே நாளில் வேறு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளும் போர்ட்டபிளிட்டி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முன்பு, ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், வோடஃபோன், டோகோமோ என்று ஏழெட்டு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் இருந்தன.  ஒன்றில் சேவைக் குறைபாடு இருந்தால் வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற மொபைல் போர்ட்டபிளிட்டி தேவைப்பட்டது. அதுவும் விரும்பிய உடன் அதே எண்ணை மாற்றுவது எல்லாம் கடினமாக இருந்தது.
இப்போது டோகோமோ, ஏர்செல் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

airtel

அரசு உதவி செய்யவில்லை என்றால் மூடிவிடுவோம் என்று வோடஃபோன் ஐடியா அறிவித்துள்ளது. ஏர்டெல் எப்போது அதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் என்றே தெரியவில்லை. தனிக்காட்டு ராஜாவாக ஜியோ உருவாகி வருகிறது. இந்த நிலையில், மொபைல் போர்ட்டபிளிட்டியை மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டத்தை டிராய் அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு செய்ய வேண்டியது எல்லாம், “உங்கள் மொபைல் எண்ணில் இருந்து port என்றும் இடைவெளிவிட்டும் உங்கள் பத்து இலக்க தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு 1900 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இதையடுத்து UPC குறியீட்டு எண் குறுஞ்செய்தி மூலம் வழங்கப்படும். அருகில் உள்ள சேவை வழங்கும் நிறுவனத்திற்கு சென்று அதனை காண்பித்து அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும்.

jio

கட்டணம், ஆதாரம் போன்றவற்றை அளித்தால் புதிய சிம் கார்டை நீங்கள் விரும்பும் தொலைத்தொடர்பு நிறுவனம் உங்களுக்கு வழங்கும். இதன் மூலம் பழைய எண்ணை மாற்றாமலேயே புதிய சேவைக்கு மாறிக் கொள்ளலாம். அந்த எண்ணானது மூன்று நாட்களில் செயல்பாட்டுக்கு வந்துவிடும்” என்று கூறியுள்ளனர். ஆளே இல்லாத கடையில் யாருக்கு ராஜா டீ ஆத்துறீங்க!