மூன்று வேடத்தில் நடித்து அசத்தும் ராய் லட்சுமி!

 

மூன்று வேடத்தில் நடித்து அசத்தும் ராய் லட்சுமி!

ராய் லக்ஷ்மி நடித்து வரும் சிண்ட்ரெல்லா படத்தில் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னை: ராய் லக்ஷ்மி நடித்து வரும் சிண்ட்ரெல்லா படத்தில் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ராய் ல‌ஷ்மி. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தமிழில் கடைசியாக நீயா 2 படத்தில் நடத்துத்திருந்தார். ஜெய், வரல‌ஷ்மி சரத்குமார், கேத்ரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறாமல் தோல்வியை தழுவியது. 

தற்போது ராய் லக்ஷ்மி சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் வினோ வெங்கடேசன் இயக்கிவரும் இப்படத்தைக் கல்லூரி வினோத், ஷாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

எஸ்.எஸ்.ஐ புரோடக்சன் சார்பில் சுப்பையா சண்முகம் தயாரித்துவரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது. 

raai

இந்த நிலையில் இதில் ராய் லஷ்மி மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும், இது தவிர மூன்றாவதாக நடிக்கும் வேடம் சஸ்பென்ஸாக வெளியிடப்படாமல் இருக்கின்றனர். 

இதுபற்றி இயக்குநர் கூறுகையில், ‘சஸ்பென்ஸ் திரில்லர் உருவாகும் இத்திரைப்படம் பல முக்கிய டுவிஸ்ட்களை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பார்வையாளர்கள் மத்தியில் கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும்’ என்று கூறியுள்ளார்.