மூன்று ரியர் கேமரா செட்டப் கொண்ட ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

மூன்று ரியர் கேமரா செட்டப் கொண்ட ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஹூவாய் மேட் 20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ஹூவாய் மேட் 20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது ஹூவாய் மேட் 20 ப்ரோ ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மூன்று ரியர் கேமரா செட்டப் இடம்பெற்றுள்ளது. மேலும், 24 எம்.பி செல்பி கேமராவும் உள்ளது. இவை தவிர இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், 10-லெவல் டைனமிக் பிரெஷர் சென்சிங் தொழில்நுட்பம், 3D ஃபேஸ் அன்லாக், 3D லைவ் எமோஜி மற்றும் ஏ.ஐ லைவ் மாடல் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

mate

ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 3120×1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே

ஹூவாய் கிரின் 980 பிராசஸர்

– 720 MHz ARM மாலி-G76MP10 GPU

– 6 ஜி.பி. ரேம்

– 128 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0

– 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8

– 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2

– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4

– 24 எம்.பி. செல்பி கேமரா, f/2.0

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

இன்டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக்

வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)

டூயல் ஸ்பீக்கர்கள்

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

– 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– 40 வாட் சூப்பர்சார்ஜ், 15 வாட் வயர்லெஸ் க்விக் சார்ஜ்

ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு, பிளாக், டுவிலைட் மற்றும் எமரால்டு கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.69,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி முதல் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனுடன் சென்ஹெய்சர் PXC550 வயர்லெஸ் ஹெட்போனும் சேர்த்து (அதன் விலை ரூ.29,990) ரூ.71,990 விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.