மூன்று முக்கிய மாநகராட்சிகளைக் குறிவைக்கும் பிஜேபி… குழப்பத்தில் அதிமுக..!?

 

மூன்று முக்கிய மாநகராட்சிகளைக் குறிவைக்கும்  பிஜேபி… குழப்பத்தில் அதிமுக..!?

அதிமுக,திமுகவுக்கு இணையாக பிஜேபியும் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வாங்கிக் கொண்டு இருக்கிறது.

அதிமுக,திமுகவுக்கு இணையாக பிஜேபியும் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வாங்கிக் கொண்டு இருக்கிறது. உள்ளாட்சிப் பதவிகளில் அமர்ந்தால்தான் மக்களோடு மக்களாக பழக முடியும் , அது அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டாக மாறும் என்கிறார்கள் அந்தக் கட்சியினர்.
அதிமுக தலைமை மாநகராட்சிகள் எதையும் கூட்டணிக் கட்சிகளுக்குத் தரமாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தாலும் பிஜேபியினர் விடுவதாக இல்லை!

election

குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சியாக ஆனபிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது.இதற்குமுன்பு நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போது அதன் கடைசி நகர்மன்ற தலைவர் மீனா தேவ்.இந்த மீனா தேவ் பிஜேபியைச் சேர்ந்தவர்.இதைச் சுட்டிக்காட்டி,மாநகராட்சி ஆனாலும் நாகர் கோவில் எங்களுக்குத்தான் என்கின்றர்.அடுத்து இவர்கள் குறிவைப்பது கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளை. அந்த பகுதிகளில் தங்களுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதோடு,மாநகராட்சி வாக்காளர்கள் நகர் பகுதியில் இருப்பவர்கள், படித்தவர்கள்,அவர்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்றும் பிஜேபியினர் நம்புகின்றனர்.

இந்த மாநகராட்சிகள் மட்டுமல்லாமல்,மாவட்ட,ஒன்றிய கவுன்சிலர் பதவிகள்,நகராட்சி தலைவர்,கவுன்சிலர்,பேரூராட்சி மற்ற கிராமப் பஞ்சாயத்துகள் வரைப் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்களாம்! மற்ற கட்சிகளைப் போல விருப்பமனு தாக்கல் செய்ய பிஜேபி இறுதி நாள் எதையும் அறிவிக்காமல் சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் விருப்ப மனுக்களை வாங்கி வருகிறது. 

BJP

பலர் போட்டி போட்டுக்கொண்டு மனுக்கொடுப்பதாகச் சொல்கிறார்கள். சென்னை மேயர் பதவிக்கு,பிஜேபியின் மாநில இளைஞர் அணித் தலைவர் வினோஜ் பி செல்வம் ,என்பவரும்,அதன் துணை தலைவர் சக்கரவர்த்தி என்பவரும் மனுச்செய்து இருக்கிறார்களாம்.

பொன்னாரும் தன்பங்குக்கு 2012 உள்ளாட்சி தேர்தலில் தங்கள் கட்சியின் பர்பாமென்ஸ் பற்றி அறிக்கை விட்டு இருக்கிறார்.25 சதவீதம் லட்சியம் ,15 சதவீதம் நிச்சயம் இதற்கு குறைவான பேச்சுக்கு இடமில்லை என்று உறுதியாகச் சொல்கிறது பிஜேபி தரப்பு.