மூன்று மாதங்களில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் விற்பனையில் அபார சாதனை!

 

மூன்று மாதங்களில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் விற்பனையில் அபார சாதனை!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றே மாதங்களில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

மும்பை: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றே மாதங்களில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

சியோமியின் துணை பிரான்டு போகோ தனது எஃப்1 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் நாளில் இருந்தே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் ஏழு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. போகோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், இந்த விற்பனை சாதனையை கொண்டாடும் வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளிப்கார்ட் மற்றும் எம்.ஐ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் 8 ஜி.பி ரேம், 256 ஜி.பி. மெமரி கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் விலை ரூ.3,000 வரை குறைக்கப்பட்டு தற்போது ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.14,900 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.3,000 வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:

– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்

அட்ரினோ 630 GPU

– 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்

– 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்

– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்

– 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் பிளாக், ஸ்டீல் புளு மற்றும் ரோஸோ ரெட் ஆகிய நிறங்களில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.