மூன்று பெண்களுடன் ஒரே கோப்பையில் குளிர்பானம் குடிக்கும் பிக் பாஸ் ஷாரிக்: பஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

 

மூன்று பெண்களுடன் ஒரே கோப்பையில் குளிர்பானம் குடிக்கும் பிக் பாஸ் ஷாரிக்: பஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற  ஷாரிக் தற்போது கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற  ஷாரிக் தற்போது கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட ஐஸ்வர்யா தத்தா, மகத், யாஷிகா உள்ளிட்ட பலரும் சினிமாவில் நல்ல வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். ஆனால், ஷாரிக்கிற்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஷாரிக் ஏற்கனவே நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த பென்சில் படத்தில் இவர் இளம் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன்பின்பு அதே போன்ற வேடமே தொடர்ந்து வந்ததால், அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், ‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா அடுத்து இயக்கும் புதிய படத்தில் ஷாரிக் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும்  இப்படத்திற்கு உக்ரம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஷாரிக்கிற்கு ஜோடியாக மிஸ் குளோபல் பட்டம் பெற்ற மாடல் அழகியும் நடிகையுமான  அர்ச்சனா ரவி நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

இதே போல் ஷாரிக் நடிக்கவுள்ள #143 என்ற  படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில்  மூன்று பெண்களுடன் ஷாரிக் ஒரே கோப்பையில் குளிர்பானம் அருந்துவது போல் உள்ளது. பிரசாந்த் கரண் என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.